மஹா பெரியவா அனுபவங்கள்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏
சங்கராம்ருதம் - 187
ஸ்வாமிநாதர், பள்ளியில் 1906வது ஆண்டில் நான்காவது ஃபாரத்தில் பயின்று வந்தபோது, மாணவர்கள் பள்ளியின் ஆண்டு விழாவுக்கென ஷேக்ஸ்பியர் என்னும் ஆங்கில மகாகவி எழுதிய "ஜான் மன்னர்" என்னும் நாடகத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நாடகத்தில் ஆர்தர் இளவரசன் என்னும் முக்கிய பாத்திரத்தைத் தாங்கி நடிக்கத் தகுதியான மாணவன் கிடைக்கவில்லை. அப்போது, பன்னிரண்டு வயதே நிரம்பிய ஸ்வாமிநாதரின் நினைவு தலைமை ஆசிரியருக்கு வந்தது. உடனே அவர், ஸ்வாமிநாதரை அழைத்து, அந்தக் கதாபாத்திரத்தை அவரே நடிக்க வேண்டுமென்று கூறினார்.
இந்தச் செய்தியை பெற்றோறிடம் ஸ்வாமிநாதர் கூறி, அந்த நாடகத்தில் நடிப்பதற்குத் தேவையான உடைகளைத் தைத்துத் தரவேண்டுமென்று கேட்டிக் கொண்டார். பழமையில் ஊறிய அந்தப் பெற்றோர், தங்கள் புதல்வன் நாடகத்தில் நடிப்பதை விரும்பவில்லை. ஆனால், அருமைப் புதல்வனின் ஆசையைப் புறக்கணிக்கவும் அவர்கள் மனம் கொள்ளவில்லை. இந்த நிலையில், அவர்கள் ஸ்வாமிநாதருக்குத் தேவையான உடைகளைத் தைத்துக் கொடுத்து, நாடகத்தில் நடிப்பதற்கும் ஒருவாறு அனுமதி அளித்தார்கள்.
இரண்டே நாட்களில், ஸ்வாமிநாதர், அந்த நாடகத்தில் வரும் உரையாடல்களையெல்லாம் மனப்பாடம் செய்து கொண்டார். சொல்வன்மை படைத்த அச்சிறுவர், யாவரும் வியக்கும் வண்ணம் மிகத் திறமையுடன், அந்த நாடகத்தில் நடித்து, எல்லோரின் நன்மதிப்பையும் பெற்றார். அவரது ஒவ்வொரு பேச்சிற்கும், ஒவ்வொரு நடிப்ப்பிற்கும், எல்லோரும் கைகளைத் தட்டி, அவரை மென்மேலும் உற்சாகப் படுத்தினார்கள். அந்த நாடகத்தில் ஸ்வாமிநாதருக்கே முதல் பரிசு கிடைத்தது. ஆசிரியர்கள் எல்லோரும் மறுநாள் சாஸ்திரிகளது இல்லத்திற்கு வந்து, ஸ்வாமிநாதரது திறனைப் பற்றி அவரிடம் கூறித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.
"நாலாம் ஃபாரத்திலே படிக்கறச்சே, ஷேக்ஸ்ப்பியரின் 'கிங் ஜான்' நாடகத்தில் ஆர்தர் இளவரசராக பேசி சிறப்பாக நடிச்சதுக்கு 'ஒல்ட் இங்கிலீஷ்' புத்தகம் ஒண்ணு பரிசாகத் தந்தா. வேஷமெல்லாம் கிடையாது. வசனங்களை மனப்பாடம் பண்ணி, பேசி நடிக்கணும். அப்ப ஒரு குரூப் ஃபோட்டோ எடுத்தா. அதான் இது. இந்தப் ஃபோட்டோல நான் கைல வைச்சுன்டிருக்கறது, எனக்குப் ப்ரைஸ் வந்த புத்தகம் தான். இந்தத் தொப்பி, கோட்டு, பூட்ஸெல்லாம் என்னுது இல்லே. எங்கூட படிச்ச கிருஷ்ணஸ்வாமிகிட்ட இரவல் வாங்கிப் போட்டுண்டது" என்று கூறிச் சிரித்தார்...
மஹா பெரியவா அவதரித்த பிறகு அந்தக் குடும்பத்தில் அடுத்தடுத்து நாங்கு குழந்தைகள் பிறந்தன. பெரியவாளை அடுத்து ஒரு பெண் குழந்தை - லலிதாம்பா. பின்னர், சாம்பமூர்த்தி, சதாசிவம், கிருஷ்ணமூர்த்தி என்று மூன்று தம்பிகள். இப்படி ஆறு குழந்தைகள் பிறந்து ஷண்மதம் போல் அமைந்துவிட்டன. இதில் அதிசயம் என்ன வென்றால், அவர்களுக்கு வைத்த பெயர்களும் ஷண்மதத்துக்கு ஏற்ப தானாகவே மிகப் பொருத்தமாக அமைந்து கிடப்பதுதான்.
காணாபத்யத்துக்கு கணபதி, கௌமாரம் - ஸ்வாமிநாதன், சாக்தம் - லலிதா, சௌரம் - சாம்பமூர்த்தி (சூரியன்), சைவம் - சதாசிவம், வைஷ்ணவம் - கிருஷ்ணமூர்த்தி.
பெரியவா திருவடிகள் சரணம் 🙏
ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர🙏🙏
காஞ்சி சங்கர காமகோடி சங்கர 🙏
காமாக்ஷி சங்கர கருணா சங்கர 🙏
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏
கரை காணமுடியாத கருணை பெருங் கடலே ஞானப் பேரொளியே ஸாந்த ரூபனே ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸத்குரோ நின் திருமலர் பொற் பாதம் போற்றி போற்றி.🌹🌹🙏
⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️🙏🙏
குறிப்பு:
"மஹா பெரியவா அனுபவங்கள்" வாட்ஸ்அப் குழு 1இல் இருந்து 17 வரை மற்றும் Experiences with mahaperiyava அனைத்து குழுவிலும் மற்றும் telegram குழுவிலும் ஒரே பதிவு தான் வரும். ஒருவர் ஒருமுறை மட்டுமே சேர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். புதிதாக இணைபவர் களை வரவேற்கிறோம்.
மஹா பெரியவரின் பரிபூரண அருளையும், வழிகாட்டுதலையும் பெற இணைவீர்
**மஹா பெரியவா அனுபவங்கள் வாட்ஸ்அப் குழுவில் சேர
**மஹாபெரியவா அனுபவங்கள் டெலகிராம் குழுவில் சேர
🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.'🌹🙏
"எல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றும் அறியேன் பராபரமே"🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏